இந்தியா

“ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம் என்பதை பா.ஜ.க நினைவில் கொள்ளவேண்டும்” : மு.க.ஸ்டாலின் அறிவுரை!

டெல்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற எம்.பி.க்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க தலைவைர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம் என்பதை பா.ஜ.க நினைவில் கொள்ளவேண்டும்” : மு.க.ஸ்டாலின் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சி.ஏ.ஏ விவகாரம், டெல்லி வன்முறையைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே தொடர்ந்து, அவையில் கூச்சல் நீடித்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக டெல்லி விவகாரத்தை விவாதிக்கவேண்டும் என அவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் மக்களவை கூடியபோது எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் 2 மணியளவில் மக்களவை மீண்டும் கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் ரமாதேவி என்பவர் இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி-க்கள் தன் கையில் இருந்த காகிதத்தைப் பறித்ததாக ரமாதேவி புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் நேற்று மீண்டும் அவை கூடியவுடன் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேரையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.

அதன் காரணமாக மாணிக்கம் தாகூர், கவுரவ் கோகாய், பிரதாபன், டீன் குரியகோஷ், பென்னி பெஹானம், ராஜ்மோகன் உன்னிதான் மற்றும் குர்ஜீத் சிங் உள்ளிட்ட 7 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் எம்.பிக்கள் மீது எடுத்த இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெல்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற எம்.பி.க்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்திருப்பது எதிர்பாராதது.

ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை பா.ஜ.க நினைவில் கொள்ளவேண்டும். எனவே, 7 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெறவேண்டும்” எனத் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories