இந்தியா

“மேற்கு வங்கத்தில் வன்முறை முழக்கம்: பா.ஜ.கவினர் வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள்” - அமித்ஷாவை சாடிய மம்தா!

உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணியில் கோலி மாரோ (துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்) என கோஷம் எழுப்பிய பா.ஜ.கவினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லி போலிஸார் துணையுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறை பற்றிக் கவலைப்படாமல் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணிகளை பா.ஜ.கவினர் நடத்திவருகின்றனர்.

அதன்படி நேற்றய தினம் மேற்குவங்கத்தில் பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்த சி.ஏ.ஏ ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றிருந்தார். அப்போது சி.ஏ.ஏ-வை அமல்படுத்தியதையும், டெல்லி வன்முறையையும் கண்டித்து அமித்ஷாவின் வருகைக்கு இடதுசாரி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“மேற்கு வங்கத்தில் வன்முறை முழக்கம்: பா.ஜ.கவினர் வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள்” - அமித்ஷாவை சாடிய மம்தா!

அமித்ஷாவிற்கு எதிராக கருப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன் பறக்கவிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தின்போது Go Back Amitshah முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் நேற்று மேற்குவங்கம் முழுவதும் பரபரப்பான சூழலே நிலவி வந்தது.

இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டெல்லியில் நடைபெற்றது இனப்படுக்கொலை. இந்த இனப்படுக்கொலைக்காக பா.ஜ.க இதுவரை எந்தவித மன்னிப்பும் கேட்கவில்லை. இந்த லட்சணத்தில் மேற்குவங்கத்தைக் கைப்பற்றுவோம் என வெட்கமே இல்லாமல் பேசித் திரிகிறார்கள்.

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணியில் கோலி மாரோ (துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்) என பா.ஜ.கவினர் கோஷம் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக தற்போது 3 பேரை கைது செய்திருக்கிறோம்.

இதுபோல வன்முறையைத் தூண்டும் வகையில் கோஷம் எழுப்பியவர்களை சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய, முழக்கங்களை எழுப்பிய பா.ஜ.க தலைவர்கள் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories