இந்தியா

“காந்தியை கொன்றது போல் ‘CAA-NRC-NPR’ என்ற 3 தோட்டாக்களால் இந்தியாவை கொலை செய்கிறார்கள்” : துஷார் காந்தி!

பா.ஜ.க அரசு, என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ ஆகிய 3 தோட்டாக்களால் இந்தியாவை கொலை செய்கிறது என்று மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

“காந்தியை கொன்றது போல் ‘CAA-NRC-NPR’ என்ற 3 தோட்டாக்களால் இந்தியாவை கொலை செய்கிறார்கள்” : துஷார் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லி போலிஸார் துணையுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது.

இந்த கொடூரத் தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். அதில் 9 பேர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக, இந்திய மக்கள் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக, காந்தியை அவர்கள் மூன்று தோட்டாக்களால் கொலை செய்தார்கள் என்றும் இப்போது பா.ஜ.க அரசு என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ ஆகிய 3 தோட்டாக்களால் இந்தியாவை கொலை செய்கிறார்கள் என்றும் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

“காந்தியை கொன்றது போல் ‘CAA-NRC-NPR’ என்ற 3 தோட்டாக்களால் இந்தியாவை கொலை செய்கிறார்கள்” : துஷார் காந்தி!
Swapan Mahapatra

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துஷார் காந்தி, “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒருதலைப்பட்சமாக இயற்றப்பட்ட முதல் சட்டம் ஆகும். இது நமது அரசியலமைப்பின் ஆன்மாவிற்கு எதிரானது. சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-யை எதிர்ப்பவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லது முஸ்லிம் சார்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதன் பெயரில் வெறுப்பு பரப்பப்படுகிறது.

இந்த இரண்டு சட்டங்களும் பணக்காரர்களுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரத்தில் தொலை தூரப்பகுதிகளிலும் கிராமங்களிலும் வாழும் ஏழைமக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இந்த மக்கள் அரசாங்க அதிகாரிகளின் முன் தங்களை நிரூபிக்க வேண்டும். எனவேதான், என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ ஆகியவற்றுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories