இந்தியா

“பணம் கொடுப்பதாகச் சொல்லி பேரணிக்கு அழைத்து வந்து ஏமாற்றிய பா.ஜ.க-வினர்” : ஏழைப் பெண்கள் அதிருப்தி!

நடவுக்குப் போன பெண்களை 200 ரூபாய் தருகிறோம் என்று அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தி விட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பா.ஜ.க மீது இந்து ஏழைப்பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

“பணம் கொடுப்பதாகச் சொல்லி பேரணிக்கு அழைத்து வந்து ஏமாற்றிய பா.ஜ.க-வினர்” : ஏழைப் பெண்கள் அதிருப்தி!
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் செய்துவருகிறது.

இந்த போராட்டங்களுக்கிடையே கடந்தவாரம் டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான அமைதியான போராட்டத்தில் பா.ஜ.க தூண்டுதலின் பேரில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 40க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி நடத்த திட்டமிட்டு நேற்றைய தினம் பா.ஜ.க-வினர் பேரணி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தாங்கள் கொண்டுவந்த சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தும் ஒரே கட்சி பா.ஜ.கதான் என்று விமர்சிக்கப்படுகிறது.

“பணம் கொடுப்பதாகச் சொல்லி பேரணிக்கு அழைத்து வந்து ஏமாற்றிய பா.ஜ.க-வினர்” : ஏழைப் பெண்கள் அதிருப்தி!
கோப்பு படம்

இந்தச் சூழலில் வழக்கமாக 100 பேரை திரட்டவே தினறும் பா.ஜ.க நேற்று சில இடங்களில் 100-க்கும் மேற்பட்டவர்களை திரட்டியது. இது பலருக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தப் பேரணிக்காக சம்பந்தமே இல்லாத நபர்களை காசு கொடுப்பதாக கூறி பா.ஜ.கவினர் அழைத்து வந்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அப்படி நேற்றைய போராட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் போராட்டம் முடிந்ததும் பா.ஜ.க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது கொடுப்பதாகச் சொன்ன பணத்தை கொடுத்துவிட்டு இங்கிருந்து புறப்படுங்கள் என கோபத்துடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த சிலர் என்ன நடந்தது என்று கேட்டபோது, “நடவுக்குப் போன எங்களிடம் நீங்கள் இந்துதானே... எங்களுடன் போராட்டத்திற்கு வாருங்கள் எனக் கூறி ஒரு தலைக்கு 200 ரூபாய் தருகிறோம் என அழைந்து வந்தார்கள்.

அதன்படி வந்த எங்களை போராட்டம் முடிந்ததும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories