இந்தியா

"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை!

ஜாஃப்ராபாத் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் இரண்டாவது ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுக்கப்பட்டதாக பா.ஜ.கவை சேர்ந்த கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று முன்தினம், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்கள் மீது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து போராட்டங்களில் வன்முறை வெடித்தது. டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.

வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்டவற்றை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை!

இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்வா கும்பலின் தூண்டுதலின் பேரிலேயே நிகழ்வதாக சிஏஏ போராட்டக்காரர்களும், பல்வேறு அமைப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் பகுதியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதைக் கண்டித்த கபில் மிஸ்ரா, “ஷாஹீன்பாக் போல டெல்லியின் மற்றொரு சாலையும் மறைக்கப்பட்டுவிட்டது. இப்படியே போனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய முடியாது” என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை!

மேலும், "டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் இருக்கும் வரையே நாங்கள் அமைதி காப்போம். அதற்குப் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லை என்றால் காவல்துறையினர் சொல்வதைக்கூட கேட்கமாட்டோம். நாங்கள் சாலைகளில் இறங்கி அடித்து நொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்” எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்தே, டெல்லியில் மாபெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா தூண்டுதலின் பேரிலேயே வன்முறை நடத்தப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

"இன்னொரு ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுத்துவிட்டோம்” : வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க பிரமுகரால் மீண்டும் சர்ச்சை!

இந்நிலையில், ஜாஃப்ராபாத் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் இரண்டாவது ஷாஹீன்பாக் உருவாகாமல் தடுக்கப்பட்டதாக பா.ஜ.கவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் விதத்திலும், கலவரங்களை ஆதரிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்து வரும் கபில் மிஸ்ரா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது பேச்சை கட்சித் தலைமை இதுவரை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories