இந்தியா

பா.ஜ.க கூட்டணி கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் NRC-க்கு எதிராக தீர்மானம்!

பா.ஜ.க கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணி கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் NRC-க்கு எதிராக தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலத்தில் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், பா.ஜ.க கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநில சட்டப்பேரவையில், இன்று என்.ஆர்.சிக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ.க கூட்டணி கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் NRC-க்கு எதிராக தீர்மானம்!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.

இந்த மக்கள் விரோத சட்டங்கள் தொடர்பான வாக்கெடுப்பின்போது ஆதரவளித்த பல கட்சிகளும், பா.ஜ.க அரசின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு தற்போது எதிர்த்து வருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆளும் பீகார் மாநில சட்டப்பேரவையில், பீகார் மாநிலத்தில் என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம் என இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணி கட்சி ஆளும் பீகார் மாநிலத்தில் NRC-க்கு எதிராக தீர்மானம்!

மேலும், அம்மாநில அரசு சார்பில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலிருந்து “சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை தவிர்க்க வேண்டும்” என்று மத்திய பா.ஜ.க அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், என்.பி.ஆர் திட்டத்தை 2010ம் ஆண்டு சரத்து படியே அமல்படுத்த வேண்டும் எனவும் பீகார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories