இந்தியா

"பிரதமர் மோடி இதைப்பற்றியெல்லாம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? : ம.பி. முதல்வர் கமல்நாத் தாக்கு!

பிரதமர் மோடி இளைஞர்கள் பற்றி, விவசாயிகள் பற்றி, பொருளாதாரம் பற்றிப் பேசிக் கேட்டிருக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ம.பி. முதல்வர் கமல் நாத்.

"பிரதமர் மோடி இதைப்பற்றியெல்லாம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? : ம.பி. முதல்வர் கமல்நாத் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசும் பிரதமர் மோடி அதுகுறித்த விவரங்களைத் தருவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்.

ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான கமல் நாத் கூறியதாவது :

“சமீபகாலங்களில் பிரதமர் மோடி இளைஞர்கள் பற்றிப் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? விவசாயிகள் பற்றி பேசிக் கேட்டிருக்கிறீர்களா? பொருளாதாரம் பற்றிப் பேசிக் கேட்டிருக்கிறீர்களா?

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ‘நான் பிரதமரானால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என்றாரே... அவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த 2 லட்சம் பேரையாவது காட்டச் சொல்லுங்கள்.

அவற்றைப் பற்றியெல்லாம் மோடி பேசமாட்டார். தேசியவாதம், பாகிஸ்தான், இந்து-முஸ்லிம் பிளவு போன்ற தேவையற்ற பிரச்னைகள் குறித்துத்தான் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.

"பிரதமர் மோடி இதைப்பற்றியெல்லாம் பேசிக் கேட்டிருக்கிறீர்களா? : ம.பி. முதல்வர் கமல்நாத் தாக்கு!

1971ல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகு 90,000 எதிரி நாட்டு வீரர்களை இந்திரா காந்தி அரசு சரணடைய வைத்தது பற்றி மோடி பேசமாட்டார். ஆனால் அவர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசுவார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்ன? மோடி, அதுபற்றிய விவரங்களைத் தருவாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் பா.ஜ.க அரசு மாட்டைப் பற்றி பேசி ஓய்வில்லாமல் கொண்டிருந்ததே தவிர மாநிலத்தில் ஒரு கோசாலையைக் கூட அமைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories