இந்தியா

“இனி ஏ.டி.எம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வராது” - எதற்காக இந்த அறிவிப்பு? - குழப்பத்தில் மக்கள்!

மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டு பரிவர்த்தனை ATM-களில் இருக்காது என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ,2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

கள்ள நோட்டுகளையும், கறுப்பு பணத்தையும் ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த 2016-ம் ஆண்டில் மோடி அரசு அறிவித்தது.

மோடி அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு 3 மாதங்களாக ஏ.டி.எம் மையங்களில் வரிசையில் நின்றனர்.

“இனி ஏ.டி.எம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வராது” - எதற்காக இந்த அறிவிப்பு? - குழப்பத்தில் மக்கள்!

பல உயிர்களைக் காவு வாங்கியபிறகு புதிய 500 ரூபாய், மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. உழைக்கும் ஏழை மக்களிடம் இருந்த சேமிப்பு பழக்கத்தை முற்றிலுமாக சிதைக்கும் வகையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்த அரசாங்கம் கொண்டுவந்தது.

இதனால், சாமானியர்களின் சேமிப்பு பழக்கம் குறைந்ததே தவிர, எந்த கறுப்பு பணத்தையும் மோடி அரசாங்கம் ஒழிக்கவில்லை. அதற்கு மாறாக கறுப்பு பணம் வைத்திருந்தோர் தங்களது பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக்கொண்டனர்.

இந்த மோசமான நடவடிக்கையால் படுத்த இந்திய பொருளாதாரம் தற்போது வரை மீளவில்லை. இந்நிலையில் ஏ.டி.எம் மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

“இனி ஏ.டி.எம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வராது” - எதற்காக இந்த அறிவிப்பு? - குழப்பத்தில் மக்கள்!

மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் வங்கியின் இந்த அறிவிப்பு மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய செயலர் கே.கிருஷ்ணன் கூறுகையில், ஏ.டி.எம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வருவதால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர். இதனால், வங்கி பரிவர்த்தனையை குறைக்கும் ஏ.டி.எம்களின் நோக்கமே பாழாகிறது.

எனவே, வரும் மார்ச் 1ம் தேதி முதல், 2,000 ரூபாய் நோட்டுகளை, ஏ.டி.எம்களில் வைப்பதில்லை என, இந்தியன் வங்கி முடிவெடுத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories