இந்தியா

விடுதியில் அடைத்து வைத்து விதவைப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் சிக்கிய பா.ஜ.க MLA!

உத்திர பிரதேசத்தில் விதவைப் பெண்ணை ஒரு மாதம் ஓட்டலில் சிறைவைத்து பலாத்காரம் செய்த பா.ஜ.க., எம்.எல்.ஏ உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் அடைத்து வைத்து விதவைப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் சிக்கிய பா.ஜ.க MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் பா.ஜ.க.,வினர் அதிகஅளவில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளி அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் டெல்லியில் முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ., மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது, கணவனை இழந்த பெண் ஒருவரை ஒரு மாதமாக ஓட்டலில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமையில் பாஜக எம்.எல்.ஏ ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விடுதியில் அடைத்து வைத்து விதவைப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் சிக்கிய பா.ஜ.க MLA!

உத்திர பிரதேச மாநிலம், படோஹி தொகுதியைச் சேர்ந்த பாஜ எம்.எல்.ஏ., ரவீந்திர நாத் திரிபாதி. இவருடைய மருமகன் சந்தீப் திவாரி அதேப் பகுதியைச் சேர்ந்த விதவைப்பெண் ஒருவரை கடந்த 2016ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலிஸில் புகார் அளித்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து திருமணம் செய்துக்கொள்வதாக சந்தீப் திவாரி கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த பெண்ணும் புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

இதன்பிறகு பல மாதங்களாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து, ஏமாந்த அந்த பெண் இதுதொடர்பாக மீண்டும் புகார் அளிக்கப் போவதாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சமாதானம் செய்வதாக கூறி சந்தீப் திவாரி, ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஒரு மாதம் ஓட்டலில் சிறைவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

விடுதியில் அடைத்து வைத்து விதவைப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை : உ.பி-யில் சிக்கிய பா.ஜ.க MLA!

மேலும், இதனைப்பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண்ணும் இவ்வளவு காலம் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். தற்போது அங்குள்ள பெண்கள் அமைப்பின் துணையுடன் இந்த சம்பம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் படோஹி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாகவும், கர்ப்பமான தன்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும் இது தொடர்பாக எம்.எல்.ஏ., ரவீந்திரநாத் திரிபாதி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு போலிஸார் 7 மீது பாலியல் வன்கொடுமை கடத்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு அதன்படி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories