இந்தியா

"உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என இஸ்லாமியர்களுக்கு நோட்டீஸ்” - வேலையைக் காட்டிய பா.ஜ.க அரசு!

“உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள்” என ஐதராபாத்தை சேர்ந்த 127 பேருக்கு UIDAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என இஸ்லாமியர்களுக்கு நோட்டீஸ்” - வேலையைக் காட்டிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள்” என ஐதராபாத்தை சேர்ந்த 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நோட்டீஸ் அனுப்பி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலி தகவல்களை அளித்து ஆதார் அட்டை வாங்கியதாக 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) ஐதராபாத் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது :

“ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. ஆதார் கேட்டு விண்ணப்பிக்கும் ஒருவர் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்கவேண்டும் என ஆதார் சட்டப்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் வழங்கக்கூடாது என யு.ஐ.டி.ஏ.ஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள எங்களது அலுவலகத்திற்கு, 127 பேர் போலி தகவல்களை அளித்து ஆதார் எண் பெற்றுள்ளதாக போலிஸார் அறிக்கை அனுப்பினர்.

அதனடிப்படையில் குறிப்பிட்ட 127 பேருக்கும், வரும் 20ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி, உரிய காரணங்களை விளக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கும், குடியுரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆதார் எண் ரத்து செய்யப்படுவதற்கும், ஒருவரின் நாட்டு குடியுரிமைக்கும் எந்த வகையிலும் தொடர்பு இல்லை. விசாரணையின் போது, போலி ஆவணங்கள் அளித்து ஆதார் பெற்றது உறுதி செய்யப்பட்டால், ஆதார் எண்ணை ரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என இஸ்லாமியர்களுக்கு நோட்டீஸ்” - வேலையைக் காட்டிய பா.ஜ.க அரசு!

ஐதராபாத் பவானி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முகமது சட்டர்கான் என்பவருக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இதற்குமுன் ஒருமுறை கூட வெளிநாட்டுக்குச் செல்லாத நிலையில் இந்த நோட்டீஸைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அச்சமடைந்துள்ள நிலையில், ஆதாரை ரத்து செய்துவிடுவோம் என எச்சரிக்கும் தொனியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories