இந்தியா

’ஆதார், பாஸ்போர்ட் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது’ - சாமானியர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிய பா.ஜ.க

ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்பித்தாலும் குடியுரிமை பெறமுடியாது என அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

’ஆதார், பாஸ்போர்ட் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது’ - சாமானியர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிய பா.ஜ.க
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதி அளித்தாலும், பல கட்டுப்பாடுகளை விதித்தும், ஆவணங்களைக் கேட்டும் மக்களை அலையவிடும் வேலையை மறைமுகமாகச் செய்து வருகிறது.

குறிப்பாக ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சமர்பித்தாலும் குடியுரிமை பெற முடியாது என அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் குடியுரிமைக்கு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும் என பல கேள்விகளை எழுப்பி வரும் வேளையில், இந்தத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்திய குடிமக்கள், குடியுரிமை பெற என்ன ஆவணங்கள் தேவை என்பது பற்றி மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ம் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி இந்திய குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்பட தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

’ஆதார், பாஸ்போர்ட் இருந்தாலும் குடியுரிமை கிடைக்காது’ - சாமானியர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கிய பா.ஜ.க

அதையடுத்து மற்றொரு ட்விட்டர் பதிவில், “ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்றவை குடியுரிமை பெற தேவையான ஆவணங்களாக (ஆதாரமாக) கருதப்படாது. ஏனெனில் அவையெல்லாம், இந்தியாவில் தங்கியுள்ளதற்கான ஆதாரம் மட்டுமே. அதனால் குடிமகன் எனக் கூறுவதற்கு அந்த ஆதராங்கள் போதாது.

தங்களின் குடியுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள பிறந்த தேதி, பிறந்த இடத்தை குறிக்கும் ஆதாரம் தேவை. உதாரணமாகப் பிறப்புச் சான்றிதழ் போன்றது.

அதேபோன்று, கல்வியறிவு பெறாத மக்களுக்கு எந்த ஒரு சான்றிதழும், ஆவணமும் இல்லை என்றால், அவர்கள் இந்த ஊரில் பிறந்தார்கள் என்று உறுதிபடுத்தும் விதமாக ஊர்மக்களின் சாட்சி போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “குடிமக்களை துன்புறுத்துவதோ, நாட்டை விட்டு வெளியேற்றுவதோ இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் அல்ல, அதேநேரத்தில் இந்தியாவின் குடியுரிமை என்பது எளிதாகவே இயல்பாகவோ கிடைக்காது ” எனக் குறிப்பிட்டுள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories