இந்தியா

“செயல்படாத லோக்பால் அமைப்பு எதற்கு?” - பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கொந்தளித்து ராஜினாமா செய்த நீதிபதி!

லோக்பால் அமைப்பு செயல்படாமல் முடங்கியுள்ளதைக் கண்டித்து அதன் உறுப்பினர் திலீப் போஸ்லே ராஜினாமா செய்துள்ளார்.

“செயல்படாத லோக்பால் அமைப்பு எதற்கு?” - பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கொந்தளித்து ராஜினாமா செய்த நீதிபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

லோக்பால் அமைப்பு செயல்படாமல் முடங்கியுள்ளதைக் கண்டித்து அதன் உறுப்பினர் திலீப் போஸ்லே ராஜினாமா செய்துள்ளார்.

லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டு ஓராண்டு முடிந்தும் லோக்பால் சட்டப்படி மத்திய அரசு விதிமுறைகளை வகுக்கவில்லை என்று புகார் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திலீப் போஸ்லே. இதனால் புகார்கள் மீது விசாரணை நடத்த முடியாத நிலையில் லோக்பால் உள்ளது.

லோக்பால் சட்டம் 2014ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தாலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நான்கு பேர் உள்பட எட்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Lokpal
Lokpal

அவர்களில், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திலீப் போஸ்லே தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமாவுக்கு முன்னதாக மூன்று கடிதங்களை லோக்பால் தலைவருக்கு எழுதியுள்ளார்.

அதில், லோக்பால் சட்டம் பிரிவு 59-ன் படி உரிய விதிமுறைகளை வகுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். லோக்பால் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட குழு அமைக்க வேண்டும். அவை எதுவும் நடைபெறாததால் ராஜினாமா செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டில் 1,065 ஊழல் புகார்கள் வந்ததில் 1,000 புகார்கள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 65 புகார்கள் லோக்பால் விதிமுறைகள் வகுக்கப்படாததால் நிலுவையில் வைக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories