இந்தியா

“புல்வாமா தாக்குதலால் பயனடைந்தது யார்?” : மோடி அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலால் யார் அதிக பயனடைந்தார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ- முகமது தீவீரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த சம்பவம் நடைபெற்று ஓர் ஆண்டாகிறது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவரும் நிலையில் ராகுல் காந்தி இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை இன்று நாம் நினைவுக்கூறுகிறோம். இந்த வேளையில் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

1. இந்த தாக்குதலால் யார் அதிக பயனடைந்தார்கள்?

2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன?

3. இந்த தாக்குதலுக்கு அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பா.ஜ.க அரசைச் சேர்ந்த யார் பொறுப்பேற்றது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories