இந்தியா

“ஆட்சியே போனாலும் பரவாயில்லை” : CAA எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாராயணசாமி!

6வது மாநிலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“ஆட்சியே போனாலும் பரவாயில்லை” : CAA எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாராயணசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் இடைவீடாது நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் மேலும், பா.ஜ.க அரசு ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற ஆர்.எஸ்.எஸ் கனவை நிறுவ முயற்சிக்கிறது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் துவண்டுபோகாமல் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவந்ததன் விளைவு பா.ஜ.க டெல்லியில் படுதோல்வி அடைந்து ஆட்சியை பிடிக்கமுடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

“ஆட்சியே போனாலும் பரவாயில்லை” : CAA எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நாராயணசாமி!

இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என ஐந்து மாநிலங்களில் சட்டப்படியான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் 6வது மாநிலமாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதிக்கக்கூடாது எனக் கூறி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர்.

முன்னதாக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், சிஏஏ எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றுவதை அனுமதிக்க கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தனர். ஆளுநர் கிரண்பேடியிடமும், தீர்மானம் நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர்.

அதை ஏற்றுக் கொண்ட அவர், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை எதிர்த்து யூனியன் பிரதேச சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். ஆனால், அதையும் மீறி சிஏஏ தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானத்தை முதல்வர் முன்மொழிய எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து காங்கிரஸ், திமுக சுயேச்சை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

banner

Related Stories

Related Stories