இந்தியா

’விரைவில் தாஜ்மகால் விற்பனைக்கு...’ என்பதே மோடி ஆட்சியின் சாதனை : ராகுல் காந்தி விமர்சனம்

பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவரும் மோடி அரசு இதைச் செய்யவும் தயங்காது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

’விரைவில் தாஜ்மகால் விற்பனைக்கு...’ என்பதே மோடி ஆட்சியின் சாதனை : ராகுல் காந்தி விமர்சனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசு நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து நாட்டில் மேலும், மேலும் வேலையிழப்பையும், வேலைவாய்ப்பின்மையையும் உருவாக்கி வருவதையே திண்ணமாக கொண்டுள்ளது மத்திய பா.ஜ.க. அரசு. லாபம், நஷ்டம் என எந்த கணக்கீடும் இல்லாமல் கண்மூடித்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருவதற்கு அரசுத்துறை ஊழியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

அந்த வகையில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் போதும், லாபத்தை ஈட்டி வரும் ஆயுட்காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் பங்கையும் தனியாருக்கு விற்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு எல்.ஐ.சி ஊழியர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்தினர்.

’விரைவில் தாஜ்மகால் விற்பனைக்கு...’ என்பதே மோடி ஆட்சியின் சாதனை : ராகுல் காந்தி விமர்சனம்

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக ஜங்புரா பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மோடி அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை சாடிப் பேசியிருந்தார்.

அப்போது, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஏர் இந்தியா என அனைத்தையும் தனியாருக்கு விற்பதிலேயே கவனம் செலுத்தி வரும் மத்திய மோடி அரசு, சிறிது காலத்தில் தாஜ்மகாலை கூட விட்டு வைக்கமாட்டார்கள் எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், “ ‘மேட் இன் இந்தியா’ என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் வென்ற பிரதமர் மோடியின் அரசு 5 ஆண்டுகளை கடந்து நடந்துகொண்டிருக்கிறது.

’விரைவில் தாஜ்மகால் விற்பனைக்கு...’ என்பதே மோடி ஆட்சியின் சாதனை : ராகுல் காந்தி விமர்சனம்

ஆனால் இதுவரையில் ஒரு தொழிற்சாலையைக் கூட இந்த அரசு அமைக்கவில்லை. மாறாக, அதானிக்காகவும், அம்பானிக்காகவும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வேலை வாய்ப்பை உருவாக்குகிறேன் எனக் கூறிவிட்டு வேலையிழப்பையே உண்டாக்கி வருகிறார்கள்” என ராகுல் காந்தி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களிடையே மதவாதத்தை ஏற்படுத்தி வன்முறையையும், வெறுப்பையும் சம்பாதிக்கும் முனைப்பில் செயல்படுகிறது பா.ஜ.க. அரசு. மாறாக காங்கிரஸ் அவர்கள் பரப்பும் வெறுப்பை அழித்து அன்பை ஈட்ட நினைக்கிறது. ஏனெனில், அடிப்படையிலேயே இந்தியா அன்பிற்கான நாடாகும் எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories