இந்தியா

“விரைவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்” : பட்ஜெட் உரையில் உறுதி செய்த நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் 2020ல் கல்வித்துறைக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

“விரைவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்” : பட்ஜெட் உரையில் உறுதி செய்த நிர்மலா சீதாராமன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020-21 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.

பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்து வரும் நிர்மலா சீதாராமன், கல்வித்துறைக்கு 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 3 ஆயிரம் கோடி ரூபாய் திறன் மேம்பாட்டுக்காவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

“விரைவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்” : பட்ஜெட் உரையில் உறுதி செய்த நிர்மலா சீதாராமன்!

மேலும், இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் அதிகம் உழைக்கும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று கூறிய அவர், நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொறியாளர்களுக்கான இன்டெர்ன்ஷிப் வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

அதேபோல, இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் IND-SAT தேர்வு நடத்தப்படும். இது முழுக்க முழுக்க ஆன்லைனில் 100 முன்னணி கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் தேர்வாக இருக்கும்.

“விரைவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்” : பட்ஜெட் உரையில் உறுதி செய்த நிர்மலா சீதாராமன்!

இது கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டைப் பெற உறுதுணையாக இருக்கும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், விரைவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதற்காக 2 லட்சம் பரிந்துரைகளை மத்திய அரசு பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories