இந்தியா

மாணவரைச் சுட்ட இந்துத்வ வெறியன் - திட்டமிட்டு அரங்கேற்றியது ஃபேஸ்புக் பதிவுகளின் மூலம் அம்பலம்!

ராம்பக்த் கோபால் (Rambhakt Gopal) என்ற பெயரில் இயங்கிவரும் நபர் தொடர்ச்சியாக இந்துத்வா ஆதரவு கருத்துகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

மாணவரைச் சுட்ட இந்துத்வ வெறியன் - திட்டமிட்டு அரங்கேற்றியது ஃபேஸ்புக் பதிவுகளின் மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் மகாத்மா காந்தியின் 72வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத சங்கபாரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவதூறுகளைப் பரப்பி, போலிஸ் மூலம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது நேரடியாகவே மாணவர்கள் மீது தூப்பாக்கிச் சூடு தாக்குதலையும் நிகழ்த்திள்ளனர்.

மாணவரைச் சுட்ட இந்துத்வ வெறியன் - திட்டமிட்டு அரங்கேற்றியது ஃபேஸ்புக் பதிவுகளின் மூலம் அம்பலம்!

இந்துத்வ வெறியர் ஒருவர் ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கிச் சுட்டதில் மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபரை சாவகாசமாக கைது செய்த போலிஸார் அவரை பிடிக்கும்போது பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் ‘ராம்பக்த் கோபால்’ எனக் கூறிய நிலையில் போலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்து சமூகவலைதளங்களில் ஆய்வு செய்தபோது, இந்தத் தாக்குதலை முன்பே திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.

ஃபேஸ்புக்கில் ராம்பக்த் கோபால் (Rambhakt Gopal) என்ற பெயரில் இயங்கிவரும் அந்த நபர் தொடர்ச்சியாக இந்துத்வா ஆதரவு கருத்துகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் எச்சரிக்கும் விதமாகவும் பதிவிட்டு வந்துள்ளார். பல புகைப்படங்களில் அந்த நபர் துப்பாக்கியுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பல்வேறு பேரணிகளிலும் கலந்துகொண்டுள்ளார். ராம்பக்த் கோபாலின் ஃபேஸ்புக் சுயவிவரப் பகுதியே அவர் எந்தளவுக்கு தீவிர இந்துத்வ வெறியராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

குறிப்பாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அங்கு நடப்பதை தனது செல்போன் மூலம் வீடியோவாகப் பதிவிட்டுவிட்டு, “Azadi de rha hu” “நான் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன், என் வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு நான் மட்டும்தான் இந்து; எனது கடைசிப் பயணம் இது. ஜெய் ஸ்ரீ ராம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு சற்று முன்னதாக, “ஷாஹீன் பாக்... ஆட்டம் முடிந்தது” எனப் பதிவிட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூரின் சமீபத்தியே பேச்சே தூண்டுகோலாக அமைந்திருக்கும் என சமூக வலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஷாஹீன் பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது, ‘தேசதுரோகிகளை சுடுங்கள்’ என்ற முழக்கத்தையும் முன்வைத்தார் அவர்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு பிறகு இந்துத்வா ஆதரவாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories