இந்தியா

அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லா : காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லாவின் புகைப்படம் வருத்தமளிக்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லா : காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்ட்டது.

மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஃப்ரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கபட்பட்டுள்ளளனர்.

தற்போது அங்கு இணைய சேவை படிப்படியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியானது. அந்தப் புகைப்படத்தில் அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கிறார்.

அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லா : காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

தொடர்ந்து 6 மாதமாக வீட்டிக்காவலில் இருக்கும் உமர் அப்துல்லா, குறித்து எந்த தகவலும் கிடைக்காக நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருப்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட தாடியுடன் உள்ள உமர் அப்துல்லா புகைப்படத்தை பகிர்ந்து, காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள உமர் அப்துல்லா புகைப்படம் வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபாரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களின் நிலையை எண்ணி சமஅளவில் அக்கறைப்படுவதாகவும் மற்றும் உரிய விசாரணை இன்று அடைக்கப்பட்டுள்ள மற்ற காஷ்மீர் தலைவர்கள் எண்ணி வருவத்தப்படுவதாகவும் தெரிவிள்ளார்.

மேலும், மத்திய அரசு உடனடியாக காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அனைத்து அரசியல் தலைவரைகளையும் விடுவித்து பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னாதாக இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா? இதல்லாம் எப்போது முடிவுக்கு வரும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பலரும் மோடி அரசின் இத்தகைய அடக்கு முறைக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories