இந்தியா

“குடியரசு நாட்டில் தான் இருக்கிறோமா?” : அடையாளம் தெரியாத நிலையில் ‘வெள்ளை தாடியுடன்’ உமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“குடியரசு நாட்டில் தான் இருக்கிறோமா?” : அடையாளம் தெரியாத நிலையில் ‘வெள்ளை தாடியுடன்’ உமர் அப்துல்லா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது.

மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவை இன்னும் அமல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறிது சிறிதாக தொலைத் தொடர்பு சேவைக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துவரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் அடையாளம் காண முடியாத வகையில் நீண்ட வெள்ளை தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கிறார். தொடர்ந்து 6 மாதமாக வீட்டிக்காவலில் இருக்கும் உமர் அப்துல்லா, குறித்து எந்த தகவலும் கிடைக்காக நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருப்பது அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உமர் அப்துல்லாவை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. குடியரசு நாட்டில் தான் நாம் இருக்கிறோமா..? இதல்லாம் எப்போது முடிவுக்கு வரும்” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பலரும் மோடி அரசின் இத்தகைய அடக்கு முறைக்கு எதிராக தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories