இந்தியா

இந்தியாவின் பருவநிலை மாற்றம் அபாய கட்டத்தில் உள்ளது - கிரேட்டா தன்பெர்க் எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிவியல் உண்மைகளை இந்தியா புறக்கணிப்பதாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 இந்தியாவின் பருவநிலை மாற்றம் அபாய கட்டத்தில் உள்ளது - கிரேட்டா தன்பெர்க் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றத்தின் 50வது மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பொருளாதார நிபுணர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் பங்கேற்று உரையாற்றினார்.

அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிரேட்டா, பருவநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கைகளை டாவோஸ் மாநாடு முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக கூறினார்.

நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கான முதலீடுகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த மாநாட்டில் கலந்துகொண்ட எந்த தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பருவ நிலை மாற்றம் குறித்த அறிவியல் ரீதியிலான உண்மைகளை இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும். உலகம் முழுவதிலும் இருப்பதை போல இந்தியாவிலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு அபாய கட்டத்தில் உள்ளது என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories