இந்தியா

70% ஏழைகளின் மதிப்பை விட 1 % கோடீஸ்வரர்களின் மதிப்பு அதிகம் : ஏற்றத்தாழ்வு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை!

'டைம் டு கேர்' ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

70% ஏழைகளின் மதிப்பை விட 1 % கோடீஸ்வரர்களின் மதிப்பு அதிகம் : ஏற்றத்தாழ்வு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் 70 சதவீத ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 4 மடங்கு அதிகம் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரத்தில் உலக பொருளாதார கூட்டமைப்பின் (WEF) 50வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆக்ஸ்பாம் உரிமைகள் குழு சார்பில் 'டைம் டு கேர்' என்ற ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்த தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அந்த அறிக்கையில், “உலகின் 2,153 கோடீஸ்வரர்கள், 460 கோடி (உலக மக்கள் தொகையில் 60 சதவீதம்) மக்களை விட அதிகமான சொத்துமதிப்பைக் கொண்டுள்ளனர்.

70% ஏழைகளின் மதிப்பை விட 1 % கோடீஸ்வரர்களின் மதிப்பு அதிகம் : ஏற்றத்தாழ்வு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை!

இந்தியாவைப் பொறுத்தவரை, 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 2018-19ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூபாய் 24.42 லட்சம் கோடி மதிப்பை விட அதிகம். 70% இந்திய ஏழைகளின் சொத்து மதிப்பை விட, 1 சதவீத இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகில் மக்களிடையே சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகி வருவதும் இந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

70% ஏழைகளின் மதிப்பை விட 1 % கோடீஸ்வரர்களின் மதிப்பு அதிகம் : ஏற்றத்தாழ்வு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை!

ஏழை, பணக்காரர்கள் இடைவெளி அதிகரிப்பு ஒவ்வொரு நாட்டிலும் பெரும் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கிறது.

தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ ஒருவர் ஒரு விநாடிக்கு 106 ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார். அவர் 10 நிமிடம் பெறும் ஊதியத்தைப் பெறவே வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு ஆண்டு ஆகும். சி.இ.ஓ ஒரு ஆண்டு பெறும் ஊதியத்தைப் பெற வீட்டு வேலை செய்யும் பெண்கள் 22 ஆயிரத்து 277 ஆண்டுகள் உழைக்கவேண்டும் என்கிற புள்ளிவிவரமும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

70% ஏழைகளின் மதிப்பை விட 1 % கோடீஸ்வரர்களின் மதிப்பு அதிகம் : ஏற்றத்தாழ்வு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை!

உலக அளவில் 22 கோடீஸ்வரர்களின் மதிப்பு என்பது, ஆப்ரிக்காவில் உள்ள அனைத்து பெண்களின் மதிப்பை விட அதிகமாகும். அடுத்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்கள் தற்போது செலுத்தும் வரியை விட 0.5 சதவீதம் கூடுதலாக வரி செலுத்துவார்கள்” என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சமத்துவத்தில் நிலவும் மிகப்பெரும் இடைவெளி அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என பொருளாதார அறிஞர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories