இந்தியா

சாலை விபத்தால் இந்தியாவில் 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் ஆய்வில் வெளியாகியுள்ளது

File
File
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் இயக்குவது போன்றவற்றால் சாலை விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்த போதிலும், விபத்துகள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், இந்தியா முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 417 பேர் பலியாகியதாகவும், 2017ல் 4 லட்சத்து 64 ஆயிரம் சாலை விபத்துகளில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories