இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட தலித் பெண் : குஜராத்தில் கொடூரம்!

குஜராத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்யை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட தலித் பெண் : குஜராத்தில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், கடந்த 2017-ம் ஆண்டில், பெண்களுக்கு எதிராக 3,59,849 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

இந்நிலையில் நாடுமுழுவதும் பரபரப்பான அரசியல் நடவடிக்கை நடந்திருக்கும் இந்தவேளையில், குஜராத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் சரியா என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டிசம்பர் 31-ம் தேதி மொடசா பகுதிக்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமானதால் அந்த பெண் வீடு திரும்பாததையடுத்து பெண்ணின் வீட்டார் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட தலித் பெண் : குஜராத்தில் கொடூரம்!

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அப்போது அந்த பெண்ணுடன் அவரது சகோதரி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை அழைத்து போலிஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக, பெண்ணின் சகோதரி கூறுகையில், ”நாங்கள் மொடசா நகருக்குச் செல்லும் போது பிமல் வர்வாட் என்ற இளைஞர் ஒருவர் தனது சகோதரியை மிரட்டி காரில் அழைத்துச் சென்றதாகவும், இதைப் பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினார்” என வாக்குமூலம் அளித்தார்.

மேலும் அந்தப் பெண் அந்த இளைஞரை காதலிப்பதாக போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. அதனால் வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் ஜனவரி 3-ம் தேதி, அந்த பெண்ணின் பெற்றோரை போலிஸார் அழைத்து, உங்கள் பெண் திருமணம் செய்துள்ள அந்த இளைஞருடன் சென்றிருப்பதால் விரைவில் வீடுத் திரும்பிவிடுவார் என்று கூறி வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பி வைத்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட தலித் பெண் : குஜராத்தில் கொடூரம்!

இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சரியா கிராமத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் இளம்பெண் தூக்கில் தொங்குவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது அது அந்த தலித் பெண் தான் என தெரியவந்தது.

இதனையடுத்து பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனையில் பெண் இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளியை கைது செய்யக்கோரி பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் செய்துவைத்து போராட்டத்தைக் கலைத்த போலிஸார் பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட தலித் பெண் : குஜராத்தில் கொடூரம்!

அப்போது பிமல் பர்வாட் என்பவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில் பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட காரை தனது நண்பர்களான தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட் மற்றும் ஜிகார் ஆகிய மூவரும்தான் எடுத்துச் சென்றனர் எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தலைமறைவான மூவரையும் போலிஸார் தேடி வருகின்றனர். மேலும் இதனிடையே பிரேதப் பரிசோதனை அறிக்கையை போலிஸார் வெளியிடாததால் பெற்றோர்கள் ஊர் மக்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலிஸாரின் அலட்சியமும் பெண் உயிரிழந்ததற்கு காரணம் என பெண்ணின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் #JusticeForKajal ஹேஸஷ்டேக்குகள் மூலம் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories