இந்தியா

இணைய புரட்சிகான இஸ்ரோவின் ‘ஜிசாட் 30’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது !

2020ம் ஆண்டுக்கான இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்பட்டன.

இணைய புரட்சிகான இஸ்ரோவின்  ‘ஜிசாட் 30’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் இணையதள தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ள ‘ஜிசாட் 30’ விண்ணில் செலுத்தப்பட்டது.

கார்டோசாட் 3 மற்றும் ரிசாட் 2BR1 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி கடந்த ஆண்டு இறுதியில் இஸ்ரோ சாதனை படைத்தது. இந்நிலையில், இந்தச் சாதனையை நிகழ்த்திய ஒரு மாத இடைவெளியில் அடுத்த பாய்ச்சலுக்கு இஸ்ரோ தயாராகியுள்ளது.

அதன்படி, 2020ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ‘ஜிசாட் 30’ வரும் இன்று (ஜனவரி 17) விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

இதுவரை 40 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அதில், 2005ம் ஆண்டு செலுத்தப்பட்ட இன்சாட் 4ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டது. அதற்கு மாற்றாக அதி நவீன ஜிசாட் 30 செயற்கைக்கோள், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான பிரெஞ்சு கயானாவில் உள்ள கொனொரு விண்வெளி மையத்திலிருந்து ஏரியன் ராக்கெட் மூலம் அதிகாலை 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

மேலும், ஜிசாட் 30 செயற்கைக்கோள், 15 ஆண்டு ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் இணையதள தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியாக அமையும் என்றும், கிராமப்புற பகுதிகளில் இணைய வேகத்தை அதிகப்படுத்த இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories