இந்தியா

"விண்ணுக்குச் செல்ல 4 இந்தியர்கள் தேர்வு” - இஸ்ரோ சிவன் தகவல்!

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கிய பணிகள் நிறைவடைந்துவிட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

"விண்ணுக்குச் செல்ல 4 இந்தியர்கள் தேர்வு” - இஸ்ரோ சிவன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கிய பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2020ம் ஆண்டிற்கான இஸ்ரோவின் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது, “ககன்யான் திட்டத்தின் முக்கிய பணிகள் நிறைவடைந்து விட்டன; விண்ணுக்கு அனுப்ப 4 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவ தகுதி, உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் 4 வீரர்களை தேர்வு செய்துள்ளோம், அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கவுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, அடுத்த ஆண்டு சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும். சந்திரயான் -2 வில் உள்ள லேண்டர் நிலவின் மீது வேகமாக மோதியதால் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், ஆர்பிட்டர் சிறப்பாக வேலை செய்வதால் அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஆர்பிட்டர், நிலவை ஆராய்ச்சி செய்து முக்கிய தகவல்களை தொடர்ந்து தரும்.

தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பதற்காக தூத்துக்குடியில் 2300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது” என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதற்கிடையே, சந்திரயான் 3 திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என தேதி அறிவிக்காமல் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். ஆனால், இஸ்ரோ தலைவர் சிவன் அடுத்த ஆண்டு சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories