இந்தியா

’குஜராத் கலவரம், அரச பயங்கரவாதத்தின் உச்சம்’ : முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் மகள் குற்றச்சாட்டு !

2002ம் ஆண்டு இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் தெரிவித்துள்ளார்.

’குஜராத் கலவரம், அரச பயங்கரவாதத்தின் உச்சம்’ :  முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் மகள் குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் கலவரம் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் சார்பில் பொதுவிசாரணை நடைபெற்றது.

அதில், குஜராத் படுகொலைகள் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மகள் ஆகாஷி பட் பங்கேற்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஆகாஷி பட்
ஆகாஷி பட்

அப்போது, பேசிய அவர், “2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறைகளின் போது அரசு அதிகார மையத்தின் ஒத்துழைப்போடு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பான விவரங்களை தெரிவித்த அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் கலவரம் இந்தியாவின் கருப்பு அத்தியாயமாக உள்ளது.” என ஆகாஷி பட் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories