இந்தியா

‘பாரத் மாதாகி ஜே’ எனக் கூறினால் இந்தியராகலாம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு!

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிறைவேற்றியே தீருவோம் என்ற சவாலை ஏற்கவேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். 

‘பாரத் மாதாகி ஜே’ எனக் கூறினால் இந்தியராகலாம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாரத் மாதா கி ஜே என சொல்பவர்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்பதை உறுதி செய்யவேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் மாணவர் சங்கத்தின் 54வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள்.

நாட்டை திறந்த இல்லமாக மாற்றப்போகிறோமா அல்லது அப்படி ஒரு நிலைமைக்கு இந்தியாவை மாற்றியமைக்க அனுமதித்திட முடியுமா என கேள்வி எழுப்பினார்

உலகில் உள்ள அனைத்து நாடுகளிடமும் குடிமக்கள் குறித்த சரியான கணக்கெடுப்பு உள்ளது. ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் சரியான குடிமக்கள் கணக்கீடு இல்லை.

சிந்தனையே செய்யலாமல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து வருகின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிறைவேற்றியே தீருவோம் என்ற சவாலை ஏற்க வேண்டும் என்றும், பாரத் மாதா கி ஜே என சொல்லத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.

இந்து மதத்தினரை மட்டும் முன்னிலைப்படுத்தி, இந்துத்வாவை பரப்ப பாஜக முயற்சித்து வருவதற்கு தர்மேந்திர பிரதானின் இந்த பேச்சு ஒரு சாட்சியாக உள்ளது எனவும் கருத்து கூறி கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories