இந்தியா

நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!

திருச்சி இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நித்தியானந்தாவை கைது செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சியை சேர்ந்த இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நித்தியானந்தாவை கைது செய்யுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த திருச்சி நாவலூரைச் சேர்ந்த சங்கீதா என்ற இளம்பெண், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 28ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

சங்கீதா அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது தாயார் ஜான்சிராணி, பெங்களூரு ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

இதனையடுத்து, சங்கீதாவின் உயிரிழப்பு குறித்து பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பெங்களூரு போலிஸார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், சிபிஐ விசாரணைக் கோரியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சங்கீதாவின் தாயார் ஜான்சிராணி கடிதம் எழுதி இருந்தார்.

இதனையடுத்து, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ள உள்துறை அமைச்சகம், சங்கீதா உயிரிழந்த விவகாரத்தில் நித்தியானந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் சிபிஐ உதவியை நாடுமாறும் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories