இந்தியா

பட்னாவிஸ் மனைவிக்காக மாற்றப்பட்ட அரசுஊழியர்களின் கணக்குகள் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றம்?

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி பொறுப்பு வகிக்கும் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்ட அரசு ஊழியர்களின் கணக்குகளை மீண்டும் அரசு வங்கிக்கு மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்னாவிஸ் மனைவிக்காக மாற்றப்பட்ட அரசுஊழியர்களின் கணக்குகள் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்தபோது தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்த அரசு அதிகாரிகளின் கணக்குகள் அனைத்தையும் தனது மனைவி அம்ருதா பணிபுரியும் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினார்.

தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா மகாராஷ்டிராவில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக இருந்தார். அவரது வளர்ச்சிக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றிய 2 லட்சம் அரசு ஊழியர்களின் கணக்குகள் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றப்பட்டன. இதன்மூலம் ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி ரூபாய் அரசுப் பணத்தை அந்த வங்கி கையாண்டது.

இந்நிலையில் ஆக்சிஸ் வங்கியில் வைத்திருந்த அரசு ஊழியர்களின் கணக்கை மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக அம்மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது.

பட்னாவிஸ் மனைவிக்காக மாற்றப்பட்ட அரசுஊழியர்களின் கணக்குகள் மீண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றம்?

இதனை அம்மாநில நிதி அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார். அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மனைவி பணிபுரிந்த வங்கிக்கு அரசுக் கணக்கை மாற்றி முறைக்கேட்டில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மூலம் அரசு வங்கி லாபம் ஈட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாக்பூரைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஃபட்னாவிஸ் தன் மனைவிக்காகவே அரசு வங்கிக் கணக்கை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றினார் என அமலாக்கத்துறையிடம் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories