இந்தியா

சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்திய காங்கிரஸ் - நாடு முழுவதும் சரியத் தொடங்கும் பா.ஜ.க!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்திய காங்கிரஸ் - நாடு முழுவதும் சரியத் தொடங்கும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடந்தது. 103 பேரூராட்சிகள், 38 நகராட்சிகள், 10 மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 2,840 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், சத்தீஸ்கர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக 1,283 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1,131 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் வகையில் அம்மாநிலத்தில் தேர்தல் விதிகள் திருத்தப்பட்டன. தற்போது, 10 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்திய காங்கிரஸ் - நாடு முழுவதும் சரியத் தொடங்கும் பா.ஜ.க!

கடுமையான போட்டி நிலவிய நிலையில், 38 நகராட்சி மன்றங்களில் காங்கிரஸ் 18 இடங்களிலும், பா.ஜ.க 17 இடங்களிலும் பெரும்பான்மையான வார்டுகளைக் கைப்பற்றியது. 103 பேரூராட்சிகளில் காங்கிரஸ் 48 இடங்களையும், பா.ஜ.க 40 இடங்களையும் கைப்பற்றும் சூழல் உள்ளது.

இன்னும் சில இடங்களில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதும், சுயேச்சைகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் சூழல் நிலவி வருகிறது. பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடைபெறும் மாநிலத் தேர்தல்களில் சரிவைக் கண்டு வரும் நிலையில், சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலிலும் பா.ஜ.க தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories