இந்தியா

“எதிரிகளால் ஒழிக்க முடியாமல் போன நமது பொருளாதாரத்தை மோடி ஒழித்துவிட்டார்” : டெல்லியில் ராகுல் ஆவேசம்!

எதிரி நாடுகளால் ஒழிக்கமுடியாமல் போன நமது இந்தியப் பொருளாதாரத்தை மோடி ஒழித்துக் கொண்டிருக்கிறார் என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“எதிரிகளால் ஒழிக்க முடியாமல் போன நமது பொருளாதாரத்தை  மோடி ஒழித்துவிட்டார்” : டெல்லியில் ராகுல் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நேற்றைய தினம் சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “மோடியின் நிர்வாகம் நாட்டை எவ்வாறு பிளவுபடுத்தி வெறுப்பை பரப்புகிறது என நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்துகொண்டனர்.

நமது நாட்டின் வலிமையாக இருந்த பொருளாதாரத்தை அழித்தது ஏன்?, இளைஞர்களின் வேலை வாய்ப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் குரலை ஒடுக்கியது குறித்து மக்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளித்தாகவேண்டும்.

அதுமட்டுமின்றி, வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை ஒடுக்கி, பொருளாதார வளர்ச்சியை முற்றிலுமாக மோடி சிதைத்துள்ளார். இந்த பொருளாதாரத்தை ஒழிக்க நமது எதிரிநாடுகள் முயற்சி செய்தன.

“எதிரிகளால் ஒழிக்க முடியாமல் போன நமது பொருளாதாரத்தை  மோடி ஒழித்துவிட்டார்” : டெல்லியில் ராகுல் ஆவேசம்!

அவர்களால் நமது பொருளாதாரத்தை ஒழிக்கமுடியாமல் போனது, ஆனால் மோடி மக்களின் குரல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தை ஒழித்துக் கொண்டிருக்கிறீர்.

ஏன் நீங்கள் மட்டும்தான் ஆடையை வைத்து அடையாளம் காணுவீர்காளா? ஒட்டுமொத்த இந்திய தேசம் உங்கள் ஆடையை வைத்து அடையாளம் காணுகிறது. ஏனெனில் நீங்கள்தான் 2 கோடி ரூபாய்க்கு ஆடை அணிந்துள்ளீர்கள். மக்கள் அல்ல.

இங்கு, இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் குரல்கள் இந்திய அரசியலமைப்பில் உள்ளது. அதை நீங்கள் ஒடுக்க முடியாது. அப்படி முயன்றால் இந்தியா உங்களை அனுமதிக்காது” என்று பேசினார்.

banner

Related Stories

Related Stories