இந்தியா

“பீகார் முதல்வரை காணவில்லை” - குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நூதன போராட்டம்!

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் காணவில்லை என ஒட்டப்பட்டுள்ள பேனர்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

“பீகார் முதல்வரை காணவில்லை” - குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நூதன போராட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும், எதிர்க்கட்சிகள், மாணவர்கள், முதலமைச்சர்கள் என பலர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“பீகார் முதல்வரை காணவில்லை” - குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நூதன போராட்டம்!

கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பீகாரில் பா.ஜ.க கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது.

“பீகார் முதல்வரை காணவில்லை” - குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நூதன போராட்டம்!

ஆனால ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அம்மாநில முதலமைச்சராக உள்ள நிதிஷ்குமார் இதற்கு ஆதரவா, எதிர்ப்பா என தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காததால் கோபமடைந்த அம்மாநில மக்கள் இரவோடு இரவோடு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை காணவில்லை என பாட்னா முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

முதலமைச்சரை காணவில்லை என விளம்பர பேனர் ஒட்டியிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories