இந்தியா

“இப்படிச் சொல்வது தலைகுனிவு இல்லையா?” - அ.தி.மு.க எம்.பி.,க்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி!

குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது கேலிக்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“இப்படிச் சொல்வது தலைகுனிவு இல்லையா?” - அ.தி.மு.க எம்.பி.,க்களுக்கு ப.சிதம்பரம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறுவதில் முக்கியப் பங்கு வகித்தது அ.தி.மு.க. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியைப் போல காட்டிக்கொண்டு அ.தி.மு.க எம்.பிக்கள் மசோதாவுக்கு ஆதரவளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஏன் ஆதரவளித்தோம் என்பது குறித்து அதி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அளித்த பதில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

கூட்டணி நிர்ப்பந்தத்தால் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், தலைமைச் செயலக துணை செயலாளர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி-யுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், “குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்ததற்கு அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ள காரணம் கவலைக்குரியது, கேலிக்குரியது.

தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலாளரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்களித்தோம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தலைக்குனிவு.

'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' என்ற கேள்விக்கு என்ன பதில்? இலங்கைத் தமிழர்கள் என்றல்லவா அவர்களைப் பார்க்க வேண்டும்? அவர்களில் பெரும்பான்மையானவர் இத்துக்கள் என்பதை அரசு மறந்துவிட்டதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories