இந்தியா

“ஐ.நா மீது தேசதுரோக வழக்குப் போடுவீர்களா?” - பா.ஜ.கவுக்கு திருமுருகன் காந்தி கேள்வி!

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ஐ.நா-வின் நிலைப்பாடு குறித்து திருமுருகன் காந்தி பா.ஜ.க-வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஐ.நா மீது தேசதுரோக வழக்குப் போடுவீர்களா?” - பா.ஜ.கவுக்கு திருமுருகன் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடனடியாக ஒப்புதல் அளித்த நிலையில், சட்டமாக இயற்றப்பட்டது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் போலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

“ஐ.நா மீது தேசதுரோக வழக்குப் போடுவீர்களா?” - பா.ஜ.கவுக்கு திருமுருகன் காந்தி கேள்வி!

இந்நிலையில், இதுகுறித்து ஐ.நா.சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டார்ஸின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “குடியுரிமை மசோதா விவகாரத்தில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது, ஐ.நா.,வின் அடிப்படை விதிகளில் ஒன்று. குடியுரிமை மசோதா விவகாரத்திலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என, ஐ.நா., விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. “இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் 2019 அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை மசோதா விவகாரத்தில் ஐ.நா-வின் நிலைப்பாடு குறித்து திருமுருகன் காந்தி பா.ஜ.க-வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகளை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் அம்பலப்படுத்தியதற்காக நீங்கள் என் மீது தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்து விமான நிலையத்திலேயே கைது செய்தீர்கள்.

இப்போது உங்களின் சட்டத்தை ஐ.நா பாசிசம் எனக் குற்றம்சாட்டுகிறது. ஐ.நா பொதுச் செயலருக்கு எதிராக இப்போது தேசதுரோக வழக்கு தொடரப் போகிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories