இந்தியா

குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : கட்சியிலிருந்து விலகும் பா.ஜ.கவினர்!

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க நிர்வாகி, அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : கட்சியிலிருந்து விலகும் பா.ஜ.கவினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை அடுத்து வடகிழக்கு மாநிலங்கள் போராட்டக்களமாக மாறி வருகின்றன. அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் மக்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

காஷ்மீர் மாநில மக்களை ஒடுக்கியதைப் போல் அசாமிலும் இணைய சேவை, ரயில் சேவைகளை முடக்கி ராணுவத்தை குவித்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது பா.ஜ.க அரசு. இதற்கிடையில், அசாம் மாநில பா.ஜ.க முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. வீடுகளின் மீது மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான ரவி ஷர்மா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவில் இணைந்த இவர் தற்போது குடியுரிமை மசோதாவுக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “முதலில் நான் நடிகன். பிறகுதான் அரசியல்வாதி. நான் இந்த நிலைமைக்கு ஆளானதற்கு முக்கிய காரணம் அசாம் மக்கள்தான். அவர்களுக்கு எதிரான இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க மாட்டேன். இந்த சட்டத்திருத்ததை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்.” என ரவி ஷர்மா கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் மாணவர் அமைப்புகள் நடத்தும் போராட்டத்திலும் ரவி ஷர்மா கலந்துகொண்டுள்ளார்.

குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : கட்சியிலிருந்து விலகும் பா.ஜ.கவினர்!

இதேபோல, அசாம் மாநில சினிமாவின் நிதி மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ள ஜடின் போரா என்பவரும் பா.ஜ.கவில் இருந்து விலகியுள்ளார். இதுமட்டுமல்லாமல், மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பா.ஜ.க தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories