இந்தியா

“வன்கொடுமை நடந்திருந்தால் மட்டும் வா...” - 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை புகாரை ஏற்க மறுத்த உ.பி. போலிஸ்!

உத்தர பிரதேச மாநிலத்தில் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும், அதன் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“வன்கொடுமை நடந்திருந்தால் மட்டும் வா...” - 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை புகாரை ஏற்க மறுத்த உ.பி. போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் நாட்டிலேயே அதிகமாக 86 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக மாறியிருக்கிறது உன்னாவ்.

சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு மிக முக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் உன்னாவ் மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளன. ஆனால், இன்னும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க போலிஸார் போதிய நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 கி.மீ தொலைவிலும், கான்பூரிலிருந்து 25 கி.மீ தொலையிலும் அமைந்துள்ளது உன்னாவ் மாவட்டம். இந்த கிராமத்தில் சுமார் 31 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இங்கு 86 பாலியல் வல்லுறவு வழக்குகள் மட்டுமின்றி, சுமார் 185 பாலியல் வன்முறை வழக்குகளும் கடந்த 11 மாதங்களில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“வன்கொடுமை நடந்திருந்தால் மட்டும் வா...” - 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை புகாரை ஏற்க மறுத்த உ.பி. போலிஸ்!

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து விடுவதாகவும், சில குற்றவாளிகளுக்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களே ஆதரவாக செயல்படுவதாகவும் உன்னாவ் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர்கள் பற்றி புகார் அளிக்க சென்றபோது, போலிஸார் வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் செய்தியாளர்களிடையே பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, “கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மருந்து வாங்குவதற்காக நகர்ப் பகுதிக்குச் சென்றேன். அப்போது திரும்பி வரும் வழியில் மூன்று பேர் என்னை வழிமறித்து என்னிடம் பேசத் தொடங்கினார்கள்.

“வன்கொடுமை நடந்திருந்தால் மட்டும் வா...” - 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை புகாரை ஏற்க மறுத்த உ.பி. போலிஸ்!

அவர்கள் பேச்சில் சந்தேகம் எழுந்து அங்கிருந்து வேகமாக நடந்து செல்ல முயன்றேன். பின்னர் அந்த கும்பலில் ஒருவர் என்னை பின்னால் இழுக்க, நான் கீழே விழுந்ததும் அவர்கள் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள்.

அவர்களிடம் இருந்து கஷ்டப்பட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். இதனையடுத்து மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன்.

என்னிடம் சிலர் தவறாக நடந்துக்கொண்டார்கள் எனவும், அவர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யும்படியும் புகார் அளித்தேன்.

அப்போது அங்கிருந்த போலிஸ் அதிகாரி, அந்தப் புகாரை வாங்கிக்கூட பார்க்காமல், “பாலியல் வன்கொடுமை முயற்சி தானே நடந்தது, ஒருவேளை நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், புகாரைப் பெற்றுக்கொள்கிறோம்” எனக் கூறினார்.

அதன்பின்பு கடந்த மூன்று மாதங்களாக இந்த புகாரைக் கொடுக்க காவல்நிலையத்துக்கு அலைகின்றேன். சமீபத்தில் உன்னாவ் பெண் எரித்துக் கொல்லப்பட்ட பிறகு இதுபோன்ற புகார்களை அளிக்க 1090 என்ற உதவி எண்ணை அறிவித்தார்கள். அதற்கு தொடர்புகொண்டு என்னுடைய பிரச்னை குறித்துக் கூறினேன்.

“வன்கொடுமை நடந்திருந்தால் மட்டும் வா...” - 3 மாதங்களாக பாலியல் வன்கொடுமை புகாரை ஏற்க மறுத்த உ.பி. போலிஸ்!

ஆனால் அவர்கள் அவசர தொலைபேசி எண் 100-க்கு தொடர்பு கொள்ளுமாறு கூறுகிறார்கள். அவர்களுக்கு போன் செய்தால், காவல்நிலையத்திற்குப் போய் புகார் கொடுக்க சொல்கிறார்கள். இதனிடையே என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் வீட்டிற்கு வந்து கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்கள்.

என் புகாரையும் போலிஸார் வாங்க மறுக்கிறார்கள். ஆகமொத்தத்தில் போலிஸாரும் அரசும் பாலியல் வன்கொடுமை பிரச்னையை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார். அவரது இந்தக் குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories