இந்தியா

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்குத் தொடர்ந்துள்ளது.

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த மசோதாவால் வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக பாதிக்கப்பட நேரிடும் என்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களைவையிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது.

ஆகையால், மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடருவது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி.

இதேபோல், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories