இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C48 : இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மணி மகுடம் !

பூமியைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் ரிசாட்-2பி.ஆர்1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C48 : இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மணி மகுடம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பூமியைக் கண்காணிப்பதற்காக இந்தியாவின் ரிசாட்-2பி.ஆர்1 என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

PSLV ஏவுகணை வரிசையில் 50வது ஏவுகணையான 'பி.எஸ்.எல்.வி சி48' என்ற ஏவுகணை மூலம் ரிசாட்-2பி.ஆர்1 என்ற செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.

எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், 'ரிசாட் - 2 பி.ஆர் 1' என்ற அதிநவீன செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக் கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி சி48 ஏவுகணை இன்று பிற்பகல் 3:25 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

ரிசாட் -2 பி.ஆர் 1 செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவின் ஆறு செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

ரிசாட் -2 பி.ஆர் 1 செயற்கைக்கோளில் நவீன ரேடார்கள் இடம்பெற்றுள்ளன. இவை பூமியை துல்லியமாக படம் பிடிக்கும். இந்தத் தகவல்கள் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வேளாண்மை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories