இந்தியா

“முதலில் இந்தியன்; வேறு எந்த கலரும் இல்லை” : வைரலாகும் இஸ்ரோ சிவனின் பேச்சு!

இஸ்ரோ தலைவர் சிவனின் பழைய பேட்டி ஒன்றினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 “முதலில் இந்தியன்; வேறு எந்த கலரும் இல்லை” : வைரலாகும் இஸ்ரோ சிவனின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நிலவின் தென் துருவப் பகுதிக்கு இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவிற்கு மிக அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

விக்ரம் லேன்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவலால் நாடே கவலைப்பட்டது. இஸ்ரோ தலைவர் கே.சிவன், கலங்கிய காட்சி எல்லோரையும் கலங்கவைத்தது. இதைத்தொடர்ந்து, இஸ்ரோ புதிய உச்சத்தைத் தொடும் என்று பலரும் நம்பிக்கை ஊட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், இஸ்ரோ சிவனின் பழைய பேட்டி ஒன்றினை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு சிவன் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் "தமிழரான நீங்கள் ஒரு பெரிய பதவிக்கு வந்திருக்கும் சூழலில் தமிழக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கு பதிலளித்த சிவன், “இஸ்ரோவில் எல்லா மொழியைச் சேர்ந்தவர்களும் வேலை பார்க்கிறார்கள். ஒரே ஒரு மொழியைச் சார்ந்தவர்களோ, ஒரு பகுதியை மட்டும் சேர்ந்தவர்களுடைய பங்களிப்பு மட்டும் அங்கு இல்லை. நான் இந்தியன், அதன் ஒரு பகுதியிலிருந்து இஸ்ரோ தலைவராகியிருக்கிறேன். மற்றபடி வேறு எந்த கலரும் எனக்கு இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

சிவனின் இந்தக் கருத்தை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர். சிவன் பேசிய காணொளியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து பலரும் அவரது கருத்தைப் பாராட்டியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories