இந்தியா

நடனம் ஆடும் பெண் மீது துப்பாக்கிச்சூடு : பா.ஜ.க ஆளும் உ.பியில் நடந்த கொடூரம்! - வைரல் வீடியோ

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த இளம்பெண் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷீல் சுக்லா
சுஷீல் சுக்லா
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம், சித்ரகூட் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதிர்சிங் படேல். இவர் அக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்நிலையில் அவரது மகளின் திருமண நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அப்போது, திருமண நிகழ்ச்சியின் ஒருபகுதியாக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிய இளம்பெண் ஒருவர் தனது ஆட்டத்தை திடீரென நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண்ணின் உறவினர் ஒருவர் அந்தப் பெண்ணை மீண்டும் ஆடுமாறு குரல் எழுப்பினார். அப்போது அருகில் இருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மதுபோதையிலிருந்த மணப்பெண்ணின் உறவினர், திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நடனமாடிய இளம்பெண்ணை நோக்கிச் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மேலும் அங்கு நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் மிதிலேஷ், அகிலேஷ் ஆகியோரும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர். அப்போது மதுபோதையில் சுட்ட மணப்பெண்ணின் உறவினரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

பின்னர், நடனமாடிய பெண்ணின் நண்பர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மணப்பெண்ணின் உறவினர் உட்பட இரண்டு பேரைக் கைது செய்தனர். காயமடைந்த அந்தப் பெண் சித்ரகூட் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணின் பெயர் சுஷீல் சுக்லா என தற்போது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீது நடைபெறும் வன்முறைச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories