இந்தியா

பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவில் எலி: பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து நிகழும் சத்துணவு முறைகேடு!

உத்தரப்பிரதேச மாநில, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் பட்ட மதிய உணவில் எலி இறந்துகிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவில் எலி: பாஜக ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து நிகழும் சத்துணவு முறைகேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. வறுமையின் காரணமாக பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் காக்கவும் தான் பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் சத்துணவு திட்டம் மிகமோசமான முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குறிப்பாக அங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்துள்ளது. கடந்தவாரம் கூட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒரு லிட்டர் பாலில் 81 மாணவர்களுக்கு பால் வழங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து தற்போது மதிய உணவில் எலி இறந்து கிடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஹாபூர் அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி மாணவர்களுக்கு ஹபூரைச் சேர்ந்த ‘ஜன கல்யாண் சேவா சமிதி’ என்ற என்.ஜி.ஓ அமைப்பு உணவைத் தயாரித்து வழங்கி வருகிறது.

அதன்படி கடந்த செவ்வாய் கிழமையன்று மாணவர்களுக்கு பருப்பு உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் வந்த உணவுகளை மாணவர்கள் பெரும்பாலானோர் சாப்பிட்ட நிலையில், மற்றொரு பாத்திரத்தில் எலி இறந்து கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு தெரியாமல் அதனை மறைத்துவிட பள்ளி நிர்வாகம் முயற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களில் 9 பேரின் உடல் நிலை மோசமடைந்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சிலரின் உடல்நிலையில் லேசான பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ராம்சாகர் திரிபாதி, கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories