இந்தியா

வேலூர் சிறையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நளினி!

இன்று 7வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் நளினி.

வேலூர் சிறையில் 7வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் நளினி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வேலூர் பெண்கள் தனி சிறையில் உள்ள நளினி இன்று 7வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யவேண்டும் அல்லது கருணைக்கொலை செய்யவேண்டும் எனக் கோரி நளினி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சிறை அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களை கருணைக்கொலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகம் மூலம் உச்சநீதிமன்றத்திலும் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். அதே கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று ஏழாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார் நளினி. தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி முருகனும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories