இந்தியா

விக்ரம் லேண்டர் சிதைவுகளை கண்டுபிடித்தது நாசா!

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விக்ரம் லேண்டர் சிதைவுகளை கண்டுபிடித்தது நாசா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்று வட்ட பாதையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டரை தனியாக பிரிக்கும் செயல் வெற்றிகரமாக நிகழ்ந்தது. பின்னர், விக்ரம் லேண்டரை பத்திரமாக தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.

நிலவுக்கு மேல் 2.1 கிலோமீட்டர் தொலைவில் இருந்த விக்ரம் லேண்டரின் தொடர்பை இஸ்ரோ இழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாடு இல்லாமல் மோதி செயலிழந்ததாக இஸ்ரோ அறிவித்தது. அதன் பிறகு ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்வதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்யு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

விக்ரம்லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 750 மீட்டர் தொலைவில் அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories