இந்தியா

வரவை விட செலவுதான் அதிகம் : ரயில்வே வருவாய் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரயில்வே வருவாய் சரிந்தது என சி.ஏ.ஜி அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது

வரவை விட செலவுதான் அதிகம் : ரயில்வே வருவாய் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரயில்வேத்துறையின் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-18ம் நிதியாண்டில் குறைந்துள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிதிநிலை தொடா்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், கடந்த 2017 மற்றும் 2018ம் நிதியாண்டில், 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 98 ரூபாய் 44 காசுகள் ரயில்வே செலவழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் இா்கான் நிறுவனத்திடமிருந்து பெற்ற முன்தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 102 ரூபாயை ரயில்வே செலவு செய்திருக்க வேண்டியிருக்கும் என சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவை விட செலவுதான் அதிகம் : ரயில்வே வருவாய் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை

கடந்த 2016 மற்றும் 2017ம் நிதியாண்டில் ரயில்வே நிா்வாகத்தின் கூடுதல் வருவாய் 4 ஆயிரத்து 913 கோடியாக இருந்ததாகவும், இது 2017 மற்றும் 2018ம் நிதியாண்டில் 1,665 கோடியாக குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத சரிவாகும் என்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களை இயக்குவதற்குத் தேவைப்படும் தொகையை, சரக்கு ரயில்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் 95 சதவிகித வருவாய் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு காரணமாக, மத்திய அரசின் பட்ஜெட்டை சாா்ந்திருக்க வேண்டிய நிலை ரயில்வேக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories