இந்தியா

"தொடரும் பாலியல் வன்முறையைத் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும்” - மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கும்பலைக் கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார்.

"தொடரும் பாலியல் வன்முறையைத் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும்” - மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய கும்பலைக் கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார்.

கோவையில் 11ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமி கடந்த 26ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இளைஞர் ஒருவருடன் அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரைத் தாக்கி சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

நேற்று மக்களவை விவாதத்தில் தி.மு.க நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.,பேசும்போது, “கோவையில் கடந்த நவம்பர் 26 அன்று முன்னிரவு நேரத்தில் 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளது. அப்பெண்ணுடன் சென்ற இளைஞனையும் அடித்து நொறுக்கி சாலையில் வீசியுள்ளது அந்தக் கும்பல்.

இதைப் போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இப்படிப்பட்ட மோசமான சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு மாநில அரசுகள்தான் காரணம் என மத்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க இயலாது. பாலியல் வன்முறைக்குக் காரணமானவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவை உடனடியாக மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய அரசின் ஆசி பெற்றுள்ள அரசு தமிழ்நாட்டில் நடந்து வருவதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை தடுக்கவும் இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யவேண்டும்” என வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories