இந்தியா

ஆங்கிலம் வாசிக்கத் திணறிய ஆங்கில ஆசிரியை சஸ்பெண்ட் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நிகழ்ந்த அவலம்! (video)

உத்தர பிரதேசத்தில் ஆங்கிலம் வாசிக்க திணறிய ஆங்கில ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆங்கிலம் வாசிக்கத் திணறிய ஆங்கில ஆசிரியை சஸ்பெண்ட் : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நிகழ்ந்த அவலம்! (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு முறையாகப் பாடம் நடத்துவதில்லை என்றும், ஆசிரியர்கள் சிலர் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் போனதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் பாண்டே இதுகுறித்து ஆய்வு செய்ய முடிவெடுத்து அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்குச் சென்றார். அப்போது சிக்கந்தர்பூர் சரவுசி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தேவேந்திர குமார் அங்குள்ள எட்டாம் வகுப்பு அறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடினார்.

அப்போது ஒரு மாணவரை எழுப்பி ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள முதல் பத்தியை வாசிக்க சொல்லியுள்ளார். மாணவர் புத்தகத்தில் உள்ள முதல் வரியைக் கூட வாசிக்க முடியாமல் திணறினார்கள். உச்சரிக்கக் கூட முடியாத நிலையில் மாணவர்களுக்கு அப்படி என்ன பாடம் நடத்தினார்கள் என கோபப்பட்ட ஆட்சியர் ஆசிரியை ராஜகுமாரியிடம் ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.

புத்தகத்தைக் கையில் வாங்கிய ஆசிரியை ஒவ்வொரு எழுத்தாக திணறித் திணறி எழுத்துக்கூட்டி வாசித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், “நீங்கள் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் அல்லவா? மொழியாக்கம் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஆனால், பார்த்து வாசிக்கவே இப்படி திணறுகிறீர்களே? உங்களை வாசிக்கத்தானே சொன்னேன்” என்று கோபமாகப் பேசியுள்ளார்.

மேலும், உங்களை சில நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வு, ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories