இந்தியா

“தேசபக்தர் கோட்சேவின் பேச்சை இங்கு குறிப்பிடக்கூடாது”- மக்களவையில் பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு! video

மக்களவையில் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர், மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை ’தேச பக்தர்’ என்று குறிப்பிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேசபக்தர் கோட்சேவின் பேச்சை இங்கு குறிப்பிடக்கூடாது”- மக்களவையில் பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு! video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற மக்களவையில் எஸ்.பி.ஜி சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது எஸ்.பி.ஜி. சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என தி.மு.க எம்.பி ஆ.ராசா வலியுறுத்திப் பேசினார். மேலும், எஸ்.பி.ஜி சட்டத்திருத்த மசோதா பற்றி பேசிய ஆ.ராசா, இந்த நேரத்தில் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை நினைவு கூற வேண்டும் என்றார்.

மேலும் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கோட்சே காந்தியை கொன்றதாகவும், 37 வருடங்களாக இருந்த காழ்புணர்ச்சி காரணமாக காந்தியைக் கொன்றேன் என்று தானே கோட்சே ஒப்புக்கொண்டார் என்றும் பேசினார்.

அப்போது குறுக்கிட்டு அவையில் இருந்து எழுந்த பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர், “கோட்சே ஒரு ‘தேசபக்தர்’ அவர் பெயரை இங்கு எடுத்துக்காட்டி பேசக்கூடாது. அப்படிப் பேசுவது தவறு” எனப் பேசினார். இதனால் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பிக்கள் பிரக்யா தாக்கூருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினார்கள். இதனால் அவையில் குழப்பம் நீடித்தது.

முன்னதாகவே கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறி மோடியிடம் கண்டனத்தை எதிர்கொண்டார். பிரதமரின் எச்சரிக்கையும் மீறி பிரக்யா மீண்டும் கோட்சேவை புகழ்ந்ததால் பா.ஜ.கவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரக்யா தாக்கூர் இப்படி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே பிரக்யா தாக்கூர் வகித்துவரும் ராணுவ ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க.,வின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா பரிந்துரை செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories