இந்தியா

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

அதிகாரத்தைக் கைப்பற்ற எத்தகைய ஊழல்வாதியாக இருந்தாலும் பா.ஜ.க கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் என்கிற உண்மையும் தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1967 பிப்ரவரியில் சரத் பவார் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.‌எல்‌.ஏ-வானார். அப்போது மோடிக்கு 17 வயது. அமித்ஷாவிற்கு 3 வயது. அரசியல் ராஜதந்திரிகள் என்று அழைக்கப்பட்டு வந்த மோடியையும், அமித்ஷாவையும் தனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தால் வீழ்த்தி இருக்கிறார் சரத் பவார்.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகி ஒரு மாத காலத்திற்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்து இருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க செய்த சில காரியங்கள் தான் 79 வயது சரத் பவார் தீவிரமாக களத்தில் இறங்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

மராட்டியத்தில் தேர்தலுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் தான் அமலாக்கத்துறை சரத் பவார் மீது வழக்குப் பதிவு செய்தது. 1999ம் ஆண்டுக்குப் பின்னர் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், பிராதுவ் பட்டேல் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும் முதன்முதலில் சரத் பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்த பிறகு அவர், "சிவாஜியின் சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறோம். ஒருபோதும் டெல்லியிடம் தலைவணங்க முடியாது” எனப் பேசியிருந்தார்.

மராட்டியத்தில் ஒரு மாத கால தேர்தல் பிரச்சாரத்தில் 66 கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்து இருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் சதாரா பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொட்டும் மழையிலும் தனது 79 வயதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியது தொடர்பான புகைப்படங்கள் மராட்டியத்தில் மிகவும் பிரபலமடைந்தன.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முதல்வர் பதவி கேட்டு சிவசேனா முயற்சி எடுக்கவே, பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தவ் தாக்கரே பொய் சொல்வதாக பா.ஜ.க-வின் பட்னாவிஸ் சொன்னது சிவசேனா தரப்புக்கு கோபத்தை ஏற்படுதியது. இதுவே இந்தக் கூட்டணி பிரிந்து செல்ல முக்கியக் காரணமாக அமைந்தது. சிவசேனா ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்தது தொடங்கி பா.ஜ.க உடன் கடந்த 30 ஆண்டுகாலமாக கூட்டணியில் தொடர்ந்து வந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் கடுமையாக பா.ஜ.க அரசை சிவசேனா கடுமையாக விமர்சித்து வந்தாலும் கூட்டணியை விட்டுப் பிரியவில்லை. சிவசேனாவை பகைத்துக் கொண்டது தவறு என்று தற்போது பா.ஜ.கவிற்கு புரியவைத்து இருக்கிறது.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

அதிகாரப் பசியால் பா.ஜ.க எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை கடந்த 5 ஆண்டுகாலமாக இந்த நாடு பார்த்து வருகிறது. மாநிலங்களில் பெரிய அளவில் எம்‌.எல்.‌ஏ-க்கள் இல்லாவிட்டாலும் கூட குதிரை பேரத்தின் மூலம் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருப்பது கடந்த கால வரலாறு. மோடியால் முடியாதது எதுவும் இல்லை என அதிகார போதையில் ஆட்டம்போட்டனர். ஆனால் மகாராஷ்டிராவில் வீழ்ந்திருப்பதன் மூலம் அம்பலப்பட்டு இருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக, மாநில ஆளுநரும், குடியரசுத் தலைவரும் பிரமரின் ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

மோடியும், அமித்ஷாவும் ஊழல் அரசியல்வாதிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று மேடைக்கு மேடை பேசினார்கள். மராட்டியத்தில் தேர்தல் கூட்டங்களில் பேசும்போது அஜித் பவார் ஊழல்வாதி; அவர் மீது 70,000 கோடி ஊழல் வழக்கு இருக்கிறது எனப் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அதிகாரத்தைப் பிடிப்பதற்காக அஜித் பவாரை தங்களுடன் சேர்த்துக்கொண்டு அவர்மீதான ஊழல் வழக்கை ரத்து செய்து இருக்கிறது. இதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற எத்தகைய ஊழல்வாதியாக இருந்தாலும் பா.ஜ.க கூட்டுச்சேர்த்துக் கொள்ளும் என்கிற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

2014ல் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களில் ஆட்சி அமைத்து மாநிலக் கட்சிகளை நசுக்கியது. இதனால் எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத ஒரு சூழல் ஏற்பட்டது. தற்போது மராட்டியத்தில் பா.ஜ.கவை மூன்று கட்சிகள் சேர்ந்து வீழ்த்தி இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பா.ஜ.கவிற்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் ‘உண்மை’ முகத்தை அம்பலப்படுத்திய மராட்டிய அரசியல்!

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அம்மாநிலத்தில் இதன் மூலம் லாபம் அடையும் என்றாலும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மராட்டியத்தில் வெற்றிகரமாக கூட்டணி ஆட்சியை அமைத்து இருக்கிறது. தேசிய அளவில் பல மாநிலங்களில் இருக்கும் கட்சிகளுடன் இணைத்து செயல்பட்டால் பா.ஜ.கவை வீழ்ந்த முடியும் என்று மராட்டியம் காங்கிரஸுக்கு திசையைக் காட்டி இருக்கிறது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories