இந்தியா

சபரிமலைக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் ஆதரவாளர் மீது பா.ஜ.கவினர் மிளகாய்ப்பொடி வீசி தாக்குதல்! 

சபரிமலை செல்ல திருப்தி தேசாய் உள்ளிட்ட 4 பெண்கள் கேரளாவுக்கு சென்ற நிலையில், பிந்து என்ற பெண் மீது பா.ஜ.கவினர் மிளகாய்ப்பொடி தூவி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலைக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் ஆதரவாளர் மீது பா.ஜ.கவினர் மிளகாய்ப்பொடி வீசி தாக்குதல்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சபரிமலைக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் ஆதரவாளர் மீது பா.ஜ.கவினர் மிளகாய்ப்பொடி வீசி தாக்குதல்! 

இருப்பினும், 10 வயதுக்கு மேல் உள்ள பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க கேரள அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சபரிமலை கோவிலுக்குச் செல்வதற்காக மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான திருப்தி தேசாய் உள்ளிட்ட நான்கு பெண்கள் கேரள மாநிலத்துக்கு வந்துள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் புனேவில் இருந்து கொச்சினுக்கு வந்த இந்த பெண்கள் அங்கிருந்து சபரிமலைக்குச் செல்லக் கோரி கொச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனு அளித்துவிட்டு வெளியே வந்த நால்வரில் பிந்து என்ற பெண் மீது பாஜகவினர் மிளகாய்ப்பொடி தூவி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையில், கொச்சினில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், “எங்களுக்கு பாதுகாப்பு அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அரசியலமைப்பு சட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்று சபரிமலைக்குச் செல்வோம்” என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories