இந்தியா

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?

சரத் பவார் மர்றும் அஜித் பவாரின் திட்டப்படியே இந்த நாடகம் நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மகாராஷ்டிர மாநில பத்திரிகையாளர் ஒருவர்.

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மராட்டிய மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாத காலமாகியுள்ள நிலையில், குழப்பங்களும், பரபரப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை.

பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் கூட்டணியிலான அரசுக்கு இன்று காலை மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்துவைத்தார். பா.ஜ.கவிற்கு 105 எம்‌.எல்.‌ஏ-க்கள் இருக்கும் நிலையில் 40 எம்‌.எல்.‌ஏக்கள் தேவை என்று இருக்கும்போது அஜித் பவார் 12 எம்.‌எல்.‌ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். ஆனால், 54 தேசியவாத காங்கிரஸ் எம்‌.எல்.‌ஏ-க்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறார்.

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?

அஜித் பவாருடன் சென்ற எம்‌.எல்.‌ஏக்கள் உண்மையில் அவரது ஆதரவாளர்கள் தானா என்ற கேள்வி எழும் நிலையில் அவருடன் சென்ற 7 எம்‌.எல்‌.ஏக்கள் மீண்டும் சரத் பவாரை சந்தித்து நடந்த விவகாரத்தை விளக்கியிருக்கிறார்கள்.

அஜித் பவாருடன் சென்ற தேசியவாத காங். எம்‌.எல்.‌ஏ ராஜேந்திர ஷிங்னே இதுகுறித்து விளக்குகையில், "நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரான அஜித் பவாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பி3 பங்களாவில் நான் நார்ஹரி ஜிர்வார், சந்தீப் கிஷிர்சகர், சுனில் ஷெல்கே ஆகியோர் இருந்தோம். நாங்கள் அனைத்து எம்‌.எல்‌.ஏக்களும் வரும்படி அறிவுறுத்தப்பட்டதாக நினைத்தோம். ஆனால் சிலர் மட்டுமே அங்கு கூடி இருந்தோம்.

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?

ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்திக்கலாம் என்று கூறினார்கள். பா.ஜ.க தலைவர்கள் வரத் தொடங்கினார்கள். முதல்வராக பட்னாவிஸ் திடீரென பதவி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, அஜித் பவாரும் பதவியேற்றார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் அங்கிருந்து கிளம்பி சரத் பவாரை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்று விளக்கினோம்" என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அஜித் பவாருடன் உடனிருந்த முக்கிய நபராக கருதப்படும் தனஞ்செய் முண்டேவும் சரத் பவாரை நேரில் சந்தித்து இருக்கிறார். 12 எம்‌.எல்.‌ஏக்கள் அஜித் பவாருடன் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் 7 எம்.‌எல்.‌ஏக்கள் மீண்டும் சரத் பவாரை நேரில் சந்தித்து நடந்த விஷயத்தை விவரித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் எம்‌.எல்‌.ஏக்கள் கூட்டம் நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 54 எம்.‌எல்‌.ஏக்களில் 48 எம்.‌எல்.‌ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?

இந்நிலையில், அஜித் பவாரிடம் தன்னை வந்து சந்திக்கும்படி சரத் பவார் அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம், அஜித் பவார் இன்று காலை ஏற்றுக்கொண்ட துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதிர்ச்சித் தகவல் ஒன்றைப் பதிவு செய்துள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுதிர் சூர்யவன்ஷி. அவர், சரத் பவார் மர்றும் அஜித் பவாரின் திட்டப்படியே இந்த நாடகம் நடந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-விடமிருந்து தப்பிக்க ‘பவார்’கள் நடத்தும் நாடகமா? - எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதன் பின்னணி என்ன?

மேலும், “பா.ஜ.கவுடன் சேர்ந்து துணை முதல்வர் பதவியை ஏற்பதன் மூலம் அமலாக்கத்துறை வழக்கில் குடைச்சல் இருக்காது. இப்போது எத்தனை எம்‌.எல்‌.ஏக்களை வேண்டுமானாலும் அழைத்துச் செல். நான் அவர்களை மீண்டும் அழைத்துக் கொள்கிறேன். பா.ஜ.க ஆட்சி அமைக்கட்டும். ஒருவேளை அதில் தோல்வியடைந்தால் சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும்.” என சரத் பவார் அஜித் பவாரிடம் தெரிவித்து, அந்தத் திட்டப்படிதான் இந்தக் காட்சிகள் அரங்கேறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மராட்டிய அரசியலில் வெகுகுழப்பான நிலையே நீடிக்கிறது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories